தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நாக்கிடம் பாடம் படியுங்க!

நாக்கிடம் பாடம் படியுங்க!

நாக்கிடம் பாடம் படியுங்க!


ADDED : டிச 23, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 23, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பஜனை என்னும் கயிறால், எல்லாம் வல்ல இறைவனை நீங்கள் கட்டி இழுத்து உங்கள் அருகே வரச் செய்யலாம்.

* நாக்கிடம் பாடம் படியுங்கள். சுவையுள்ள நல்ல பொருளாக இருந்தால், அது தொண்டைக்குள் அதைத் தள்ளுகிறது. கெட்டுப்போன தீயதாக இருந்தால் உடனே வெளியே துப்பி விடச் செய்கிறது. நல்லதை எடுத்துக் கொள்ளவும், தீயதை வெளித்தள்ளவும் நாக்கிடம் பழகுங்கள்.

* பெயரளவுக்கு நேரம் ஒதுக்கி பக்தியில் மூழ்கினால் போதாது. வாழ்வு முழுவதும் இறைவன் சந்நிதியில் வாழ்ந்து கழிக்க வேண்டும்.

* இறைவன் மிக கருணையானவன். அவனை பக்தியோடு அழைத்தால் உங்களை வழி நடத்த வருவான்.

* இறைவன் மீது, பிரிக்க முடியாத மற்றும் ஆசையில்லாத மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* மனதை குளிர்ச்சியாகவும், சுகமான நிலையிலும் வைத்துக் கொள்ள பக்தியே சிறந்த வழி.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us